
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால் கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து , 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் அறிவிப்போம் என தெரிவித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரமேலதா விஜயாகாந்த், அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், தேமுதிக பொருளாளர் எல்.கே சுதிஷ் தனது முகநூல் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் பிரேமலதா விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி எல்.கே.சுதீஷ், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சிங்கப்பெண் என்று அழைப்பர்கள், ஜெயலிதாவை ரோல்மாடலாக கொண்டவர் பிரேமலதா என்றும் எனவே சிங்கப்பெண்களான அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததாகவும் விளக்கமளித்தார்.