
அம்பத்தூர் அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா தரகர் நடமாட்டம் இருப்பதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
அதன்படி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் உதவிஆய்வாளர் அமீர் உள்ளிட்ட போலீசார் அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, கையில் சூட்கேசுடன் சந்தேகிக்கும் வகையில் சுற்றிதிரிந்த வடமாநில வாலிபரை பிடித்து, அவரது சூட்கேசை சோதனை செய்த போது, அதில் கஞ்சா இருப்பது தெர்ந்தது.
அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், திரிபுரா மாநிலம், சிபாகிஜாலா மாவட்டத்தைச் சேர்ந்த, சம்சுல் ஹகு (50) என தெரிந்தது. அவர் திரிபுராவில் இருந்து, சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து அம்மாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
போலீசார் அவரிடமிருந்த, 4.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.