
டெல்லியில் சுற்றி திரிந்தவரை பிடித்து மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு
சென்னை : சர்ச்சை மாடல் அழகி பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் 3 வருடங்களுக்குமுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி தனது ஆண் நண்பருடன் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். சர்ச்சை பேச்சு தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டுயிருந்தது. புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மீரா மிதுனையும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கையும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.கைதை தொடர்ந்து இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மீரா மிதுனுக்கு பிடி வாரண்ட் : வழக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் நடிகை மீரா மிதுன் ஆஜராகாமலேயே இருந்தார்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து தேடப்பட்டு வந்த மீரா அமைக்கும் தன்னுடைய தொலைபேசி எண்ணை அடிக்கடி மாற்றியதாலும் வெவ்வேறு இடங்களில் தங்கி வந்ததாலும் அவரை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது என தனிப்படையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்
பட்டியல் இன மக்களுக்கு எதிராக பேசிய வழக்கில் தலைமறைவாகியிருந்த மீராபத்னை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மீராமத்தின் தாய் தன்மகளை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என 2022 ஆம் ஆண்டில் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
அந்த மனுவில் தன்னுடைய மகள் டெல்லியில் இருப்பதாகவும் ஒரு இடத்தில் இல்லாமல் இருப்பிடத்தை மாற்றி வருவதால் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது
இந்த வழக்கு நீதிபதி எஸ் கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வாயிலாக, டெல்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தகவல் தெரிவித்து மீரா மிதுனை மீட்க உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு வாசாரணையில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி டெல்லி போலீஸார் உதவியுடன் டெல்லி சட்ட பணிகள் ஆணைக் குழுவால் மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மீரா மிதுனின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டெல்லி மனநல காப்பகம் : அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, “டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் மீரா மிதுன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நல பாதிப்பால் நீதிமன்ற உத்தரவை தனிப்படை போலீஸார் நிறைவேற்ற முடியவில்லை தெரிவிக்கப்பட்டது. அவரின் சிகிச்சை முடிந்த பிறகு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்துள்ளனர்