
மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் அசத்திய போட்டியாளர்கள்
சென்னை: அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஏ மேக்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை திருவள்ளூர்,செங்கல்பட்டு காஞ்சிபுரம்,திருச்சி,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 890 போட்டியாளர்கள் பங்கேற்க வந்திருந்த நிலையில் 850 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
மாநில அளவிலான போட்டியில் 4வயது முதல் 20 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர்கள் போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் ஆண்கள்,பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு வயது பிரிவிலும் ஒன்று முதல் 23 வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெற்ற அனைவருக்கும் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முதல் பரிசு வென்றவர்களுக்கு சைக்கிள் அடுத்தடுத்த இடங்களில் வென்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.