
குற்றச்சாட்டு உறுதியானால் வழக்கு பதிவு செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை
சென்னை : கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியை சேர்ந்தவர் மினு முனீர் என்கிற மினு குரியன்
இவர் 2008 ஆம் ஆண்டு கேரளாவில் சின்னத்திரையில் அறிமுகமாகி திரைப்படத்தில் நடித்துவருகிறார். மினு முனிர் என்கிற மினு குரியன் முதன் முதலில் மலையாள சின்னத்திரையில் அறிமுகமாகி அடுத்தடுத்து கேரளாவில் திரைப்படங்களை நடித்துள்ளார் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் கொடுமை
இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு (2014) முன்பு மினு முனீர் உடைய உறவினர் மகளான 14 வயது சிறுமியை நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வந்துள்ளார் மினு முனிர். அப்பொழுது சென்னையில் தனியார் விடுதியில் அந்த சிறுமியை தங்க வைத்து அந்த சிறுமியிடம் நான்கு நபர்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது அப்பொழுது அந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து கேரளா சென்றுள்ளார்.
ஹேமா கமிட்டி
இந்த நிலையில் தான் கேரளாவில் ஹேமா கமிட்டி உருவக்கப்பட்டது. இந்த கமிட்டியில் திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாகவும் தீர்வு உருவாக்கப்படும் என கேரள அரசால் உருவாக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த சிறுமி கடந்த 2024 ஆம் ஆண்டு கேரளா காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கேரளா போலீசார் சம்பவம் நடைபெற்ற இடம் சென்னை என்கிற காரணத்தினால் வழக்கை சென்னை திருமங்கலத்திற்கு மாற்றம் செய்து உள்ளனர்.
சென்னை அழைத்து வந்து விசாரணை
திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த மார்ச் மாதம் கேரள நடிகை மீனு முனீர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இந்த விசாரணைக்கு பிறகு நேற்று கேரளாவில் இருந்த மினு முனிரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்முலட்சுமி நேற்று கைது செய்து இன்று காலை ரயில் மூலமாக சென்னை அழைத்து வந்துள்ளார். தமிழ்நாடு அழைத்துவரப்பட்ட மலையாள நடிகை மீனு முனீரை விசாரணைக்கு பிறகு குற்றச்சாட்டு உறுதியானால் வழக்கு பதிவு செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்