
சமூக வளைத்ததில் பரவும் செய்தி உண்மையா
சென்னை : ரூ.2500-க்கு மேல் துணி வாங்கினால் கூடுதல் ஜிஎஸ்டியா? தனி பில் வாங்கனுமா?
சமூக வளைத்ததில் பரவும் செய்தி உண்மையா என்ன :
தீபாவளிக்கு ஆடைகள் வாங்கும் போது பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை!
“தற்போது புதிய ஆடைகள் வாங்கும் போது பில் கட்டணம் ₹2,500 வரை இருந்தால், 5% GST கட்டணம் செலுத்த வேண்டும்.
பில் கட்டணம் ₹2,500-ஐ விட அதிகமாக இருந்தால் 18% GST கட்டணம் செலுத்த வேண்டும். ஆகவே 5000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினால் பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கவும்” என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.
GST ஒவ்வொரு துணிக்கும் தனித்தனியாக (per-piece basis) விதிக்கப்படும், மொத்த பில் (bill) அடிப்படையில் அல்ல.
GST உண்மை :
சமீபத்திய GST வரி குறைப்பு எதிரொலியாக, ₹2,500 வரை விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 5% GSTம், ₹2,500-ஐ விட அதிக விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 18% GSTம் விதிக்கப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் ₹2,400 மதிப்புள்ள ஒரு சட்டை வாங்கினால் அது 5% GSTக்கு உட்படும். அதே நேரத்தில்,ரூ ₹2,500க்கு மேல் ஒரு blazer அதனுடன் சேர்த்து வாங்கினால், blazer க்கு 18% GST விதிக்கப்படும். எனவே ஒரே பில்லில், இரண்டு பொருட்களுக்கும் தனித்தனியாகவே GST கணக்கிடப்படும்.
எனவே பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை.