
கொரட்டூர் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான பிரம்மாண்ட செஸ் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
மாநில அளவில் பிரம்மாண்ட செஸ் போட்டி : 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
கொரட்டூர் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான பிரம்மாண்ட செஸ் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சென்னை : கொரட்டூரில் உள்ள பக்தவாச்சலம் வித்யாஸ்ரம் பள்ளியில் ஏ மேக்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை திருவள்ளூர்,செங்கல்பட்டு காஞ்சிபுரம்,திருச்சி,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 450 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 4வயது முதல் 20 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர்கள் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் அண்டர் 8, 10, 12, 15, 20 என ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு வயது பிரிவிலும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெற்ற அனைவருக்கும் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முதல் பரிசு வென்றவர்களுக்கு செஸ் போட்டியில் பயன்படுத்தும் டிஜிக்ளாக் அடுத்தடுத்த இடங்களில் வென்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.