
விஜய் இறங்கி வந்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்து விட்டு, தவெகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய்
தேர்தல் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என ஈபிஎஸ் கூறிய பதிலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை விளக்கம் அளித்துள்ளது.
ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாகக் கூறினார். அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி ஆட்சி அமைக்குமா என்று வினாவிற்கு, யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறினார்.