
எங்கள் உடன் அமர்ந்து முதல்வர் பிரியாணி சாப்பிட்டார்.அதே மக்கள் தானே போராடி வருகிறோம்
சென்னை : சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் தூய்மையாளர் பணியை தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனியாருக்கு ஒப்படைக்கபட்டதை கண்டித்து தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வேலைநிறுத்ததை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு கூறி இருந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்வோம் என தூய்மை பணியாளர் ஜோதி பேட்டி
12 நாள் போராட்டத்தை நடத்தி வருகிறோம் வீடுகளை விட்டு குழந்தைகளை விட்டு போராட்டி வருகிறேம் அரசு தான் எங்களை தொடர்ந்து தூண்டி வருகிறது. அவர்கள் தான் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ளனர். 31 ஆம் தேதி என்ன பணியில் இருந்தமோ அதே பணியில் நாங்கள் சேர வேண்டும். மக்களுக்கான தூய்மை பணிகளை மேற்கொள்ளும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் ஆந்திரா நிறுவனமான ராம்கி என்ற தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது.
நாங்கள் இங்கே இருந்து போக மாட்டோம் என தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.எங்கள் உடன் அமர்ந்து முதல்வர் பிரியாணி சாப்பிட்டார்.அதே மக்கள் தானே போராடி வருகிறோம், முதல்வர் வர வில்லை என்றாலும் துணை முதல்வர் வந்து இருக்க வேண்டும் அவரும் வரவில்லை, சேகர்பாபு எங்களது அமைச்சரே இல்லை கே.என்.நேரு எங்கே போனார் என தெரியவில்லை, கவுன்சலர்களை வைத்து மிரட்டல் விடுக்கிறார்கள்.
நாங்கள் எப்போது உங்களுக்கு வாக்குறுதி அளித்தோம் என கூறிய ஆட்சி இது தனியார் இடம் போனால் ஊதியம் குறையாது என நாங்கள் எப்படி நம்புவது, நாங்கள் போராடி பெற்ற ஊதியம் அது எங்களை பார்த்து பின்னால் ஓடுகிறார்கள். அமைச்சர் கே.என்.நேரு வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். சங்கம் இல்லை என்றால் போலீஸ் எங்களை தூக்கி எரிந்து இருப்பார்கள் உயிரே போனாலும் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம்.
தூப்பாக்கியால் சுடுவார்களா இல்லை ஜெயிலில் அடைப்பாளர்களா,. மிரட்டுவது உங்கள் வேலை இல்லை, நாங்கள் இப்போது கூட பணிக்கு செல்கிறோம் ஆனால் கடந்த 31 ஆம் தேதி பணியில் இருந்த நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தார்.