
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி தொடங்கி 13நாட்களாக தூய்மை பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் போராட்டம் நடைப்பெற்றது. என்னை தொடர்ந்து நேற்று இரவு தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக சென்னை மாநகராட்சி கட்டடத்தில் இரண்டு வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு:
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போராட்டம் நடத்துதல், பேருந்தை சேதப்படுத்துதல், காவலர்களுக்கு காயம் ஏற்படுத்துதல் என மொத்தம் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் தொடர்பாக வழக்கறிஞர் பாரதி உள்ளிட்ட 889 நபர்கள் மீது அனுமதியின்றி கூடுதல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும், பேருந்து சேதப்படுத்தியதாக இரண்டு ஓட்டுநர்கள் அளித்த புகாரில் 2 வழக்குகளும், சந்திரன் உள்ளிட்ட இரண்டு ஓட்டுநர்கள் அளித்த புகாரின் பேரில் ஆறு நபர்கள் மீது பொது சொத்தை சேதப்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் இரண்டு வழக்குகளும்,
பெண் காவலர்களை தாக்கியது தொடர்பாக இரண்டு வழக்குகளும், இரண்டு பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது காயம் ஏற்படுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும், காவலரின் கையை கடித்தது தொடர்பாக வளர்மதி மற்றும் ஆர்த்தி ஆகியோர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் 4 வழக்குகள் பெரியமேடு காவல் நிலையத்திலும், 2 வழக்குகள் வேப்பேரி காவல் நிலையத்திலும் பதியப்பட்டுள்ளது. இது தவிர பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நேற்று நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.