
79 சுதந்திர தினத்தை முன்னிட்டு 79 பெண்களின் உருவத்தை ஓவியமாக வரைந்து அசத்தினார்
சென்னை: அண்ணா நகரில் உள்ள Dessin அரங்கத்தில், ஓவியம் சார்ந்த பிரம்மாண்ட உலக சாதனை ஒன்று நடைபெற்றது. இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், விசுவல் கம்யூனிகேஷன் மாணவி தர்ஷினி வெண்ணிலா, பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 79 பெண்களின் உருவங்களை ஓவியமாக வடிவமைத்தார்.
சிறப்பம்சமாக, ஒரு கையை பின்புறம் கட்டிக்கொண்டு, ஒரே கையால், அக்னி வண்ணக் கலை (Fire Painting) மூலம், மதியம் 12.16 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3.33 மணிக்கு நிறைவடைந்த சுமார் மூன்று மணி நேரத்தில், 79 ஓவியங்களையும் அவர் உருவாக்கினார்.
இந்த சமூக விழிப்புணர்வு சாதனையை, (Lincoln Book of Records) லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் ஜோசப் இளந்தேன்றல் அங்கீகரித்து, உலக சாதனை படைத்த மாணவி தர்ஷினி வெண்ணிலாவிற்கு உலகசாதனை சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். இந்த 79 ஓவியங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை டிசைன் நிறுவன நிர்வாகி செய்திருந்தார்.