
ஒரு வாரத்தில் சரணடைய கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
டெல்லி: கொலை வழக்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்;ஒரு வாரத்தில் சரணடைய கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
2012ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் இந்திய மல்யுத்த வீரர் சுசில்குமார். இவர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தங்கர் மற்றும் அவரது நண்பர்களை 2021ம் ஆண்டு மே மாதம் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சாகர் தங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 2021 ஜூன் மாதம் சுசில்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சுஷில் குமாருக்கு ஆண்டு மார்ச் மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கமான ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது .
இந்நிலையில் உயிரிழந்த சாகர் தங்கரின் தந்தை அசோக் தன்கட் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா அமர்வு விசாரணை நடத்தியது.